×

உலகத் தாய்மொழி தினம்; 600 மாணவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்து

கடலூர்: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் என்ற எழுத்து வடிவில் நின்று ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 600 பேர் சாதனை படைத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தாய் மொழியாகிய தமிழின்  பெருமையைப் பறைசாற்றும்   விதமாக,  கடலூர் விருத்தாச்சலம் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த  மாணவர்கள் 600க்கும் மேற்பட்டோர் தமிழ் என்ற எழுத்து வடிவில் நின்று, 50 க்கும் மேற்பட்ட திருக்குறள்களைச் சொல்லி, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

நமது தாய் மொழியாகிய தமிழின் பெருமையை  தரணி எங்கும் பரப்பிட வேண்டும், இளம் வயதிலேயே தமிழின் மீது மாணவர்களுக்கு பற்றும் ஆர்வமும் மிகுந்திட வேண்டும் என்றநோக்கில் ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஆர்.ஜெய்சங்கர் மற்றும் இயக்குநர் என்.எஸ். தினேஷ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில்,  மாணவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர்.

The post உலகத் தாய்மொழி தினம்; 600 மாணவர்கள் உருவாக்கிய தமிழ் எழுத்து appeared first on Dinakaran.

Tags : World Mother Language Day ,Cuddalore ,Jayapiriya Vidyalaya School ,Jayapiriya Vidyalaya Education Group ,Cuddalore District Virudachal ,
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...